Ticker

6/recent/ticker-posts

Ad Code



கனடா தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் வெடித்த சர்ச்சை


சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா (Canada) என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சர்சசைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கனடா மீது அமெரிக்கா வரிகளை விதித்ததன் மூலம் வர்த்தகப் போர் தொடங்கிய நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரிகளை விதித்தது.

அத்துடன், கனடியர்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கவும் செய்தனர்.

கனடா தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் வெடித்த சர்ச்சை | Donald Trump Sharply Criticized Canada

இந்தநிலையில், ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மற்ற பெரிய எதிரிகளை விட கனடாவுடன் அவர் ஏன் கடுமையாக இருக்கிறார் என்பதற்கான பதிலை ட்ரம்ப் அளித்துள்ளார்.

அதில், தாம் எல்லா நாடுகளுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்வதாகவும் ஆனால் சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

அத்தோடு, கனடாவிற்கு ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்கி வருவதாகவும், இதனால் கனடா 51 ஆவது மாகாணமாக இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து வரும் வர்த்தகப் போரைத் தவிர, ட்ரம்ப் கனடாவை தங்களது 51 ஆவது மாகாணம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருவருவதுடன் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, கவர்னர் ட்ரூடோ என்றும் அடையாளப்படுத்தி வந்தார்.

அவர்களுடைய மரக்கட்டைகள், மின்சாரம் எதுவும் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்பதுடன் அவர்களுடைய வாகனங்கள் அமெரிக்காவுக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிக சமீபத்தில் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, ட்ரம்புக்கு எதிராக துணிந்து செயல்படுவோம் என உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments