
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தாய்லந்தின் பேங்காக் நகரிலும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
பலர் வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அப்போது மன்னர் Chulalongkorn நினைவு மருத்துவமனை, BNH மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து பலர் அருகில் இருந்த பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டனர்.
கர்ப்பிணி ஒருவர் பூங்காவில் பிள்ளையைப் பிரசவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.
மருத்துவ ஊழியர்கள் சுற்றி நிற்க மருத்துவப் படுக்கையில் குழந்தை பிறந்தது.
சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அந்தக் குழந்தை எதிர்காலத்தில் தாம் நிலநடுக்கத்தின்போது பிறந்ததைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று ஒருவர் பகிர்ந்தார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com

0 Comments