
அலைகளே ஆடையாய்
உடையவள் மேவுறாள்
படையெடுக்குது கண்கள்
தடை உத்தரவு விடுங்கள்.
கடைதனில் உடையெடுத்து
மடைதனை நான் விரித்து
சடைமுடி முனிவனாய்
நடை போட விடாதீர்கள்.
வடை வடிவக் கன்னத்தை
துடைத்திடும் ஆழியை
பிடரியில் இரண்டு வையுங்கள்.
தொடை வரை நுரையும்
தடவுவதைப் பாருங்கள் .
குடையு மனசு நோவுது வயசு
ஜாடை காட்டியே
நீரோடையோடு நுழைகிறாளே.
சமுத்திரப் பெண்ணே
வேண்டாமடி விசித்திரம்
நீராலே நீ உருவாகி
நீராவியாய் நீ உருகையிலே
கருகிடுமே என்னிதயமடி
உப்பளப் பெண்ணே
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments