Ticker

6/recent/ticker-posts

Ad Code



'நாங்கள் கிரிக்கெட் விளையாட்டாளர்கள்' - பங்களாதேஷ்க் கும்பல் கைது


மலேசியாவுக்குள் நுழைவதற்குப் பொய் சொன்னதாகச் சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் கும்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

15 ஆடவர்கள் தாங்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் என்று பொய் சொன்னதாக நம்பப்படுகிறது.

ஆடவர்கள் நேற்று முன்தினம் (17 மார்ச்) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இம்மாதம் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடக்கவிருப்பதாகவும் அதில் விளையாடவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

பினாங்கு கிரிக்கெட் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர்கள் அதிகாரிகளிடம் காட்டினர்.

மலேசியாவின் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கடிதம் போலி என்று தெரியவந்ததாக The Star ஊடகம் சொன்னது.

சந்தேக நபர்கள் கூறிய தேதிகளில் கிரிக்கெட் போட்டியும் இல்லை.

சந்தேக நபர்கள் ஏதோ ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மற்றக் காரணங்களுக்காக மலேசியாவுக்குள் நுழைய முயன்றிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments