Ticker

6/recent/ticker-posts

Ad Code



தீவிரமாகும் வாய்ப் புற்றுநோய்


வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் சுமார் 3 பேர் உயிரிழப்பதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 3000 வாய்ப் புற்றுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர். உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்னாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குறைந்தது 3 பேராவது நாளொன்றில் உயிரிழக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு தடுப்பதற்கு இலகு வழிகள் உள்ளன. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகள், கடித்து உண்ணும் புகையிலைப் பொருட்கள் போன்றவையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

itnnews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments