
யாழ். நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக (4) ஒன்றுகூடிய மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நெடுந்தீவில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“வேணாம் வேணாம் சாவு வேணாம்”, “போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம்”, “எம் குடும்ப விளக்கை அணைத்து விடாதே”, “குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
அத்துடன் மதுபானசாலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments