Ticker

6/recent/ticker-posts

Ad Code



சாம்பியன்ஸ் டிராபி தோல்வி எதிரொலி.. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் – ஆகியோருக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை


பாகிஸ்தான் மற்றும் துபாய் மண்ணில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனனாக இந்த தொடரில் பங்கேற்றதால் நிச்சயம் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தக்க வைக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாகிஸ்தான் புகழ் பாடி வந்தனர்.

ஆனால் நடைபெற்று வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி முதல் அணியாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.

அதோடு நட்சத்திர வீரர்கள் பலர் அந்த அணியில் இருந்தாலும் அவர்களது மோசமான ஆட்டம் பலரது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த பல ஆண்டுகளில் இல்லாத சரித்திர தோல்வியை இந்த தொடரில் அவர்கள் சந்தித்ததால் அந்த அணியின் மீது பெருமளவு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதோடு பாகிஸ்தான் அணியில் இருந்து முக்கிய வீரர்கள் பலரை நீக்கி அணிக்குள் இளம் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்து வந்தன. இந்நிலையில் அதன் முதல் கட்டமாக தற்போது பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. மார்ச் 16-ஆம் தேதி முதல் டி20 தொடரானது துவங்கவுள்ள வேளையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சல்மான் அலி ஆகா கேப்டனாகவும், ஷதாப் கான் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 போட்டிகளில் இருந்து அவர்கள் இருவர் நீக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர்களாக பார்க்கப்படும் இவர்களுக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments