
வெள்ளை மாளிகையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகவதாகவும் இந்த நாட்டை அவமதிப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது.
உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.
ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் 3-ஆம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு டிரம்ப் கடுமையாக சாடினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments