
அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க எடுத்த அதிரடி முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு புதிய வரி விதிப்பு கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதேபோன்று சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா மற்றும் கனடா நாடுகள் அறிவித்தன. இதனால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்று அச்சம் எழுந்தது. இந்நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். புதிய வரி விதிப்பு கொள்கையை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments