
வாழ்க்கை தொட்டத்தில்
வண்ணக் களஞ்சியத்தை
எண்ண வீதியிலே எழிலார்ந்த
அன்பு மலரினை
ஆசையுடனே நினைத்தேன்
என் மனதினை அண்ணனவன்
கடந்த காலத்திலே
களிப்புடனே முடித்தான்
அன்னவன் எண்ணத்தை
தங்கையவள் மாண்புடனே
நடத்தினாள் காலவெள்ளத்தில்
வளர்ந்த பூஞ்சிட்டு
ஆனதனால் கடமையும்
வந்தது இன்று
அந்தநாள் நினைவும்
வந்தது கடந்த
காலமோ முடிந்துவிட்ட
கதை ஆச்சு!
அண்ணனின் மனமும்
இந்த அன்னத்தை
தலைவனவன் கையில்
பிடித்துக் கொடுத்து
ஆழ்ந்த அமைதிக்
கடலில் நீந்தியது
இன்றவள் பாசக்
கடலில் காலம்
முழுவதும் நீந்த
இருக்கும் வாழ்க்கை
கடல் இரண்டிலும்
கிடந்து புரள்கிறது!
கடமைக்கு முதலிடம்
என்பதனை அறியாமல்
அண்ணா கதறுகிறேன்
இந்த நிலையில்
என்னை பார்க்கத்தான்
ஏங்கி இருந்தாயோ?
என் மனக்கோவிலைத்
திறந்து வைக்கிறேன்
அங்கு ஏற்றிவைத்து
ஒளிவிளக்கு என்அத்தான்
அன்புடனே மனமிசைந்து
வாழ்கிறேன் அத்தகைய
வாழ்க்கை பாதையை
வகுத்தளித்த வள்ளலே
என்னைப்பற்றி துயரங்
கொள்ளும் இனியவள்
வாழ்வில் இன்பம்
குவிப்பது உன்எண்ணம்
அவ்வெண்ணம் ஈங்கு
என் தலைவனால்
இனிமையுடன் நிறைவேற்ற
படும் என்ற
நிம்மதியில் உன்மனம்
துயில்க அமைதியில்
நீந்துக எனக்கென்று
ஓரிதயம் உண்மையில்
வையகத்தில் இருக்கும்
அது என் இன்னுயிரின்
மலர் போன்று
மென்மையான இதயம்
அதற்காக வாழ்கின்றேன்
வாழத் துடிக்கிறேன்
வாழ்க்கையின் பாதைதான்
தெரியாமல்!
வசந்தா பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments