Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-22


பாவலரேறு பெருஞ்சித்தரனார்

"சீரோ டுரைத்தார் 
சிலிர்த்து"

தனித்தமிழைக் காணத் தவியாய்த் தவித்தார்
கனித்தமிழில் ஏனோ கலப்பு--

இனிப்பிலே 

யாரேனும் எட்டியை ஏற்பரோ;? "சித்திரனார்"
சீரோ டுரைத்தார் சிலிர்த்து:
    
"நல்லதை நாடணும் நாவு"


கொன்று புசிப்பக் கொலையென 
எண்ணிடணும்
தின்ற பழக்கத்தைத் தீர்த்திடணும்--

நன்றெனச்

சொல்லிய
"வள்ளலார்"சோதி கலந்தாலும்
நல்லதை நாடணும் நாவு.........

நாவுக் கரசர் நடத்திய நன்னெறியில்
பாவுக் கரசெனப் பாபுனைய--

ஏவிடும்

வல்ல கணையென "வாய்ப்பேச்சு"
ஆகாதே
நல்லதை நாடணும் நாவு

(தொடரும்)



Email;vettai007@yahoo.com


Post a Comment

0 Comments