Ticker

6/recent/ticker-posts

Ad Code



கேட்குமா கேட்காதா! .


கோபுர நிழலில் 
அமர்ந்து தைக்கும் 
வேலைகளில் 
ஈடுபடுபட்டிருந்தார்
ஒருநாள் கூட
கோவில்
உள்ளே நுழையாத
அந்த செருப்பு தைப்பவர்

அப்படியொரு சமயம் 
பலரும் வெளியே
செருப்பை விட்டு 
பக்தர்கள் கூட்டம் 
கொட்டும் மேள'த்துடன் 
கோவிலினுள் நுழைவதுமாய் இருக்க...

இறுக்கிப்பிடித்த
கிழிசல் காலுடன்
செருப்பு தைக்கும் 
அவருக்கு
உள்ளே நுழைய முடியாத...
அதே அடிமாட்டின் தோலில் செய்த 
பறையோசை 
தூரத்தில் 
எங்கோ கேட்கிறது.

சாயிராம்.
9443394625.



Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments