
அழகான அறை! மிருகத்தோல் ஜமுக்காளம்; அதன் ஒரு கோணலில் பழக்கூடை ஒன்றும் மறுபுறத்தில் மதுபானமும் அதனை ஊற்றிப் பருகுவதற்காக மண்டையோடுகள் இரண்டும் வைக்கப்பட்டிருந்தன.
புதுமணத் தம்பதியினர் உள்நுழைந்ததும் ஓலைக்கதவு சாத்தப்பட்டு விட்டது! நேற்றிரவு ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட உடம்பு வலியும், வனத்திலிருந்து மேடுபள்ளங்களையும் - முட்புதர்களையும் கடந்து வந்த அசதியும் இருவரையும் அந்த ஜமுக்காளத்திலேயே கண்ணயர வைத்தது!
நெடுநேர சயனத்தின் பின்னர் முதலில் செரோக்கி கண்விழித்தான். மூங்கில் சுவர்களுக்கிடையிலிருந்து வந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்போது இல்லை! வெளியில் இருள் கவ்வியிருந்ததை அவனால் உணர முடிந்தது.
அவனை உரசிக் கொண்டவளாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் ரெங்க்மா.
அவளது தூக்கத்தைக் கலைக்க விரும்பாத அவன் - மதுபானத்தை மண்டையோட்டில் ஊற்றி - தூங்கிக் கொண்டிருந்த ரெங்க்மாவைப் பார்த்தவனாக அவளையும் சேர்த்துப் பருகிக் கொண்டிருந்தான்!
போதை தலைக்கேற அவனுக்கு நேற்றிரவு மரமேடையில் நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.
இப்பொழுது அப்பாவித்தனமாக தூங்கிக் கொண்டிருக்கும் அவள் நேற்றிரவு அவனைப் படுத்தியபாடு! அப்பப்பா.... நினைத்தாலும் மெய் சிலிர்க்கின்றது? அவள் தனக்குள் தேக்கிவைத்திருந்த அத்தனை அன்பையும் அன்றிரவே வெளியாக்கிவிட்டாளோ என்று கூட எண்ணத்தோன்றியது அவனுக்கு!
அவனது கைவிரல்கள் தூங்கிக் கொண்டிருந்த அவளது வதனம் தடவ - உதடுகள் பட்டும்படாதவாறு அதனை முத்தமிட்டன!
தொடர்ந்தும் ரெங்கமா அசைவின்றி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்! அவளது வதனம் தொட்ட அவனது ஒற்றைக்கரம் மெல்ல நகர்ந்து, கழுத்தை வருடியபடி கவசத்துள் நுழைந்தது!
எப்போதோ ஒரு நாள் ‘பெரியகல்’ பகுதியில் ரங்குவை சகதிக்குள் வீசி எறிந்தபோது, தெறித்த அழுக்கை அகற்றிக் கொள்வதற்காக நீராடச் சென்றபோது, தான் மரமேறி பட்டை கழற்றி தன் கைப்பட அவளுக்கு செய்து கொடுத்த கவசம் பல வர்ணங்களால் அலங்காரம் பெற்று அவளது மாரை மறைத்திருப்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை!
நேற்றிரவு மரமேடையில் தேன்மதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கூட்டி, அவனைச் சூடேறவைத்து, பதுக்கிக் கொண்டிருந்த அவனது உணர்வைச் சவாலுக்கிழுத்த அவளுக்கு இன்றிரவு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டுமென்று தனக்குள் நினைத்துக் கொண்டான் செரோக்கி!
வெளியில் வனவாசிகளின் ஆடல் பாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. தாரதப்பட்டங்களின் சத்தம்
காதுகளைத் துளைத்தன. இனி.... விடியும் வரை கானகத்துக் காதல் ஜோடி இங்கிருந்து ஓடவும் முடியாது - ஒழியவும் முடியாது என்ற நிலை!
கானகத்து ஆதிவாசிகளின் ஆடல்களும் பாடல்களும் சற்றேனும் நிறுத்தப்படாத நிலையில், பொழுது விடியலை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது!
(தொடரும்)
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments