
அன்னை மடித் தேடும்
பிள்ளை நான்
அன்னையவளோ
மண்ணின் வயிற்றினுள்
மறைந்துக் கொண்டாளே
தேடும் தேடலில்
தொலைகிறேன்
காணும் காட்சியில்
ஏங்குகிறேன்
தாயும் பிள்ளையும்
கண்ணில் விழும்
காட்சி தோன்றலில்
கண்ணீராய் கரைகிறது
ஏக்கங்கள் தோற்று
வித்து செல்கிறது
எங்கே நீ
பிரிவின் துயர்
இதுக்கென்ன பெயரோ
விதியோ
சொல் சொல்
வார்த்தை இல்லா
மௌனமே நிலைக்கிறதே
அன்னை மடி தேடும்
பிள்ளை நான்
அன்னையவளோ
மண்ணிண் வயிற்றுக்குள்
ஒளிந்துக் கொண்டாளே
சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி, புத்தளம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments