Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-183


குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

நெருக்கமான நட்போடு இருக்க நண்பருங்க  செய்யுது தவறுகளைப்பத்தி மத்தவங்க சொல்லும்போது, அதை நம்பாம இருக்கவுங்ககிட்டயே அந்த நண்பர்கள் மோசமா நடந்துகிட்டா, அவங்க நட்போடு இருந்த நாளெல்லாம் வீணாப் போன நாளுங்க தான். 

குறள் 809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

ரொம்ப நாளா நட்போடு இருக்கவங்களை அவங்க கெடுதல் செஞ்சாக்கூட நட்பை விடாம வச்சிருக்கவங்களை இந்த ஒலகம் விரும்பி பாராட்டும். 

குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பழைய சேக்காளிங்க தப்பு செஞ்சாலும், அவங்களை பகையா நெனைய்க்காம இருக்கவங்களை, எதிரிங்க கூட விரும்புவாங்க. 

குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

பண்பு இல்லாத பயலுவொ, நம்ம மேல அன்பு இருக்கமாதிரி உருகுவானுவொ. அதை நம்பி ஏமாறமா, அவனுவொ தொடர்பை வெட்டி விடுறது தான் நல்லது.

குறள் 812
உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

தனக்கு தேவைப் படும்போது ஒட்டிக்கொள்றதுமாவும்,தேவை இல்லாதப்போ வெலகிப் போறதுமாவும் இருக்க பயலுவொளோட நட்பு இருந்தாலும், இல்லாட்டாலும் ஒரே மாதிரி தான். 

(தொடரும்)


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments