
நேர்மைக் கொடிபிடிக்க
கூட்டமுண்டு!
ஊழலின்தேரிழுக்க
கூட்டமுண்டு!
பொய்சொல்லி நாள்தோறும்
வாழ்வோரைச் சுற்றியும்
கூட்டமுண்டு!
உண்மையில் வாழ்வில்
உழைப்போரைச்
சுற்றியும் கூட்டமுண்டு!
சோம்பலுடன் வாழ்வோரைச்
சுற்றியும் கூட்டமுண்டு!
ஆள்வோரின் பக்கமும்
கூட்டமுண்டு!
ஆள்வோரை நாளும்
எதிர்ப்போர்க்கும் கூட்டமுண்டு!
இப்பக்கம் கூட்டமுண்டு!
அப்பக்கம் கூட்டமுண்டு!
எப்பக்கம் என்றாலும்
யாரிங்கே எப்படி என்றாலும்
கூட்டமுண்டு சுற்றித் திரண்டு.
மதுரை பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments