Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-84


425. வினா : யார் பகை கூடாது? 
விடை : சொல் திறம் மிக்கவர்களின் பகை 
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை. (872)

426. வினா :  உட்பகைக்கு ஆளான குடி என்னவாகும்? 
விடை: அரத்தால் தேய்ந்த பொன்போல வலிமை 
குறையும் 
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. (888 )

427. வினா : பாம்புடன் வாழ்வது போன்றது எது? 
விடை : உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழ்வது 
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 
பாம்போடு உடனுறைந் தற்று. (890 )

428. வினா : பெண்ணே பெருமை உடையவள் எப்போது? 
விடை: பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையைக் காணும்போது 
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.(907) 

429. வினா : தூண்டிலில் சிக்கிய மீன் போன்ற நிலை எது? 
விடை: சூதாட்டம் மூலம் பெறும் வெற்றி 
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. (931)

(தொடரும்)


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments