
இது போன்ற கேள்விகளுக்கு நாம் எவ்வாறு பதில் காணப்போகிறோம்?! எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. இதில் உண்மை இருக்குமோ என்ற ஐயமும் கூடவே எழுகிறது. எந்தச் செய்தியை யார் வழிக் கேட்டாலும், அச் செய்தியின் உண்மை நிலையைக் காண்பதுதான் அறிவு என்று சொன்ன வள்ளுவரைப் பற்றியே வந்துள்ள செய்திகளை அவசி, உண்மை எதுவொன்று ஆராய வேண்டாமா? அது தம் கடமையல்லவா?!
வள்ளுவர் சாதாரணமான மனிதரா? தமிழ் மொழியை உலகுக்கே உயர்த்திக் காட்டியவர் அல்லவா! சங்க காலத்தல் இருந்த புலவர்கள் எல்லாம், ஏதாவது ஒரு துறை பற்றியே எழுதியவர்கள், ஏதாவது ஒரு மன்னரையோ அல்லது பல மன்னர்களைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு கருப்பொருளைப் பற்றியோதான் பாடிவைத்தார்கள்.
ஆனால், தமது ஆசான், பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளிலே, நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களில், இவ்வுலக இயலை, மானுடத்தை, தத்துவத்தை, தெறிமுறைகளை, இன்னும் சொல்லப்போனால், திருவள்ளுவர் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லும்படியாக, அத்துணைத் துறைகளையும் தொட்டு எழுதினாரே.
அத்தகைய வள்ளுவரைப் பற்றி வருகின்ற செய்திகளை ஆராய்ந்து, அதில் உண்மைச் செய்தி என்னவென்று அறிந்து கொள்வது, தமிழராய்ப் பிறந்த நம் அனைவரின் முதலாயக் கடமையல்லவா! எனவே, ஆராய்வோம் வாருங்கள்!.
தமது ஏழு குழந்தையையும் தாரை வார்த்துக் கொடுத்த, ஆதியும் பசுவனும் பின்னானில், கபிலர் வாழ்ந்து கொண்டிருந்த அந்தணரது இல்லத்திற்கு வந்திருக்க வேண்டும்! அல்லது, கபிவரது வளர்ப்புத் தந்தையான அந்தணரையாவது சந்தித்து, தங்களது வாழ்க்கையைப் பற்றி விளக்கிக் கூறியிருக்க வேண்டும். இந்தச் செய்தியைத் தனது வளர்ப்புத் தந்தையின் வாயிலாக, கபிலருக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இதனாலேயே தெளிவாக சுபிலர் எழுதினார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்தப் பாடவைக் கபிலர்தான் எழுதினாரா? அல்லது வேறு யாராவது எழுதி சுபிலர் எழுதியதாகக் கதை கட்டிவிட்டனரா?,என்றும் பலர் மயங்குகின்றனர். இதற்குக் காரணம், பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியவற்றில் உள்ள கபிலரில் செய்யுள் நடைக்கும், இவ்வசுவல் நடைக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுதலே ஆகும். எனவே இந்த சந்தேகம் எழுந்தது ஞாயமே!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments