Ticker

6/recent/ticker-posts

Ad Code



Champions Trophy : சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி!!


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில்  2ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2 ஆவது அரையிறுதி போட்டி இன்று(5) பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா மற்றும் வில் யங் களம் இறங்கினர். யங் 21 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் இணைந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரவிந்திரா இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 164 ரன்கள் சேர்த்தனர். ரச்சின் ரவிந்திரா 101 பந்துகளில் 1 சிக்சர் 12 பவுண்டரியுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் 94 பந்துகளில் 2 சிக்சர் 10 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.

டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் தலா 49 ரன்கள் சேர்க்க  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 362 ரன்கள் குவித்தது. இதையடுத்து 363 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

தொடக்க வீரர் ரிக்கெல்டன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இணைந்த கேப்டன் பவுமா, வான்டர் டசன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. பவுமா 56 ரன்களும், வான்டர் டசன் 69 ரன்களும் எடுத்தனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் பொறுப்பற்ற முறையில் கேட்ச் கொடுத்து 3 ரன்னில் வெளியேறினார். மார்க்ரம் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். 67 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 312 ரன்கள் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி விக்கெட்டிற்கு மில்லரும், இங்கிடியும் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments