Ticker

6/recent/ticker-posts

Ad Code



சஞ்சீவ கொலை; துப்பாக்கிதாரியின் மற்றுமொரு குற்றச்செயல் அம்பலம்


பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவின் வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம்  வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 27 வயதான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி, தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றவியல் பிரிவால் விவாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

jvpnews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments