
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்ததாக நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதலீட்டு ஈர்ப்பை அதிகரித்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் தொடர் மறுசீரமைப்புகளின் முக்கியத்தும் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலீனா ஜோர்ஜியேவா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments