
கிரிக்கெட் ஸ்டெம்புகளுக்கு பூஜையிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருந்து வருகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. இந்த முறை ஷ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 26 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டார். இதையடுத்து அவரே பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன்ஷிப் காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனுபவ வீரர் அஜிங்யா ரஹானேவிடம் அணி நிர்வாகம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஏலத்திதல் கொல்கத்தா அணியால் எடுக்கப்படுவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே இடம் பெற்று இருந்தார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் அவருக்கு உள்ளது.
இதேபோன்று கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதால், இந்த முறை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வழிகாட்டுதலில் அந்த அணி தொடரை எதிர்கொள்கிறது.
கொல்கத்தா அணியில் அணியில் ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், மனிஷ் பாண்டே, ரோமன் பவல், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் இடம் பெற்றிருப்பதால், மற்ற அணிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Shubho Aarombo 🙏🌸 pic.twitter.com/2ve1awWZLq
— KolkataKnightRiders (@KKRiders) March 12, 2025
இந்த நிலையில், சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்டெம்புகளுக்கு பூஜை செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் நடப்பு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகிறது. ஆரம்ப போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments