
அமெரிக்காவின் டெஸ்லாவை மிஞ்சும் அளவிற்கு சீனாவின் BYD பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் கழுகு பார்வை புகைப்படம் வெளியாகி பார்ப்போரை மெய்மறக்க செய்திருக்கிறது.
சீனா தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவையே மிஞ்சும் அளவிற்கு புது புது விஷயங்களை செய்து அசத்தி வருகிறது. சமீபத்தில்தான் காருக்கு ஐந்தே நிமிடத்தில் சார்ஜ் செய்யும் புதிய வசதியை சீனா கண்டுபிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மட்டுமே 500 கிலோவாட் சார்ஜிங் வசதியை செய்து வந்தது. இதனை முறியடிக்கும் விதமாக சீனாவின் ஒரு நிறுவனம் கார்களை சார்ஜ் ஏற்றும் புதிய super e-platform தளத்தை அறிமுகப்படுத்தியது.
அது வேறு எந்த நிறுவனமும் இல்லை BYD தான். இது டெஸ்லா நிறுவனத்தைவிட மிக அதிவேகமாக சார்ஜ் ஏற்றும் தன்மைக்கொண்டது. இது 1000 கிலோவாட் சார்ஜிங் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 5 நிமிடங்களில் கார்களை 470 கிலோமீட்டர் தூரம் செல்லத் தேவையான சார்ஜிங் செய்யும் வசதியை தரும்.
சீனா முழுவதும் நான்காயிரம் இடங்களில் அதிவேக பேட்டரி சார்ஜிங் நிலையங்களை நிறுவப்போவதாக BYD நிறுவனம் தெரிவித்தது. இதனால், முன்பைவிட தற்போது BYD நிறுவனத்தின் கார்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம் 3,18,000 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது சுமார் 161% அதிகரித்துள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை 49 % சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி உச்சகட்ட வளர்ச்சியை சந்தித்து வரும் BYD தன்னுடைய தொழிற்சாலையையும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது சீனாவின் ஹெனான் மாகாணம், zhengzhou நகரத்தில் தான் இந்த தொழிற்சாலை உருவாகி வருகிறது.
இந்த தொழிற்சாலை முழுவதுமாக கட்டி முடித்தால் சுமார் 50 சதுர மைல் பரப்பளவில் அமைந்திருக்கும் என்றும், இது சான் பிரான்சிஸ்கோவின் அளவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களில் உற்பத்தி கூடங்கள், ஊழியர்களுக்கான தங்கும் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது ஒரு முழு நகரம் போலவே இயங்குமாம்.
இந்த நிறுவனத்தில் ஏற்கனவே 60,000 பேர் பணியாற்றி வரும் நிலையில் இந்த நிறுவனம் 2025 முதல் காலாண்டில் 20 ஆயிரம் பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
இதனால் டெஸ்லாவின் மிகப்பெரிய போட்டியாக BYD நிறுவனம் உருவாகி வருகிறது.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments