Ticker

6/recent/ticker-posts

நல்லவேளை பூரான் லக்னோவில் இருக்காரு.. 200 அடிக்க வேண்டிய குஜராத்தை இதை செஞ்சு ஜெயிச்சோம்.. பண்ட் பேட்டி


ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பனிரெண்டாம் தேதி லக்னோவில் 26வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் குஜராத்துக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு சாய் சுதர்சன் – கேப்டன் சுப்மன் கில் ஆரம்பத்திலேயே அபாரமாக விளையாடி 120 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.

அதனால் 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு சுதர்சன் 56 (37), கில் 60 (38) ரன்களில் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் அடுத்ததாக வந்த ஜோஸ் பட்லர் 16, வாஷிங்டன் சுந்தர் 2, ரூத்தர்போர்ட் 22, திவாட்டியாவை 0 ரன்களில் அவுட்டாக்கி லக்னோ அசத்தியது. இறுதியில் ஷாருக்கான் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் குஜராத் 180/6 ரன்களை மட்டுமே எடுத்தது.

லக்னோவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய், சர்துள் தாகூர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய லக்னோவுக்கு துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடி 21 (18) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி 58 (31) ரன்கள் அடித்தார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் வெளுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரான் 61 (34) ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆயுஸ் பதோனி 28* (20) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.3 ஓவரில் 186/4 ரன்கள் எடுத்த லக்னோ தங்களுடைய நான்காவது வெற்றியைப் பெற்றது. மறுபுறம் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் குஜராத் தங்களது 2வது தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கான காரணம் பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு. “எங்களது செயல்முறைகளை பின்பற்றி திறமையை நம்பி பெற்ற இந்த வெற்றியால் மகிழ்ச்சி. நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியை எடுத்துக் கொள்கிறோம். குஜராத் நல்ல துவக்கத்தைப் பெற்ற போது பெரும்பாலும் யார்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசுவதே அவர்களை மடக்க எங்களது திட்டமாக இருந்தது”

“எங்களது பவுலர்கள் சரியான நேரத்தில் அபாரமாக செயல்படுத்தினார்கள். குஜராத் நல்ல துவக்கத்தைப் பெற்றும் கடைசியில் நாங்கள் கம்பேக் கொடுத்ததைப் பார்த்தது அற்புதமாக இருந்தது. நிக்கோலஸ் பூரான் போன்ற ஒருவர் உங்கள் அணியின் பக்கம் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று சொல்வேன். நீங்கள் அவர் உங்களுக்கு எதிராக விளையாடாமல் உங்கள் பக்கம் இருக்க விரும்பக்கூடிய வீரர். தற்சமயத்தில் அவர் போட்டியை படித்து பேட்டிங் செய்யும் விதம் அபாரமாக இருக்கிறது” என்று கூறினார்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments