கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-8

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-8


குகனுக்குஇராமன்மறுமொழி
என்னுயிர் போன்றவன்நீ! என்தம்பி உன்தம்பி!
இன்றுமுதல் அய்வரானோம் நாம்.

குகன்விடைபெறுதல்
பிரிவுத் துயரத்தில் தூயோன் குகனோ
தவித்து நகர்ந்தான் தளர்ந்து.

இராமன்வனம்புகுந்தகாலநிலை
இளவேனில் காலம்?முதுவேனில் காலம்?
கலங்கவைத்த கோலங்கள் காண்.
கானகத்தில் ராமனின் காலடிகள் பட்டதும்
கோலங்கள் மாறின பூத்து.

சீதைக்குக்காட்டியகாட்சிகள்
உன்னை மயிலென்றே எண்ணித்தான் சீதையே!
வண்ணமயில் நாடுவதைப் பார்.
உன்விழிகள் மான்விழியோ என்றெண்ணி மான்களும்
உன்னருகில் நிற்பதைப் பார்.
யானையின் கன்றும் புலிசிங்க க்குட்டிகளும்
சேர்ந்துவிளை யாடுவதைப் பார்.
உன்பாதம் நோகுமென்று பாதையில்  பூக்களை
இங்கே நிரப்பியதைப் பார்.
பூங்கொம்பு உன்னிடைபோல் ஊசலாடி அங்குமிங்கும்
ஏங்கி அசைவதைப் பார்.

பரத்துவாசர்வருந்துதல்
மும்முறை ராமன் வலம்வந்தே ஞானியை
வேண்டி வணங்கினான் நின்று.

பரத்துவாசர் ராமனை ஆரத் தழுவி
கலங்கினார் கோலத்தைக் கண்டு.

காரணம்கேட்டல்
நாடாளும் கோலத்தை விட்டுவிட்டு நாம்வாழும்
காடுநோக்கி வந்ததேன்? சொல்.

முனிவன்வருந்துதல்
உலகம் அரசனாக உன்னைத்தான் பார்க்க
தவம்செய்ய வில்லையே இங்கு.

பரத்துவாசன்மீண்டும்வினவுதல்
காடேக மன்னன் தசரதன் சொல்லிவிட்டுக்
கூடேந்தி வாழ்வானோ? சொல்.

தன்னுடன்தங்குமாறுமுனிவன்வேண்டுதல்
தங்களுடன் தங்குமாறு ராமனிடம் கூறினான்!
மங்களம் தங்குமென்றான் பார்.

ராமனின்மறுமொழி
பெருந்திரளாய் வந்திடுவார் மக்களென்று சொன்னான்!
அருந்தவத்தான் ஏற்றான் புரிந்து.

பரத்துவாசன்கருத்து
தோதாக சித்திர கூடத்தில் தங்கலாம்!
மாதவத்தான் சொன்னான் விழைந்து.

பரதன்வருகை
தசரத மன்னன் அழைக்கின்றான் என்றே
வசிட்டன் கொடுத்தான் மடல்.
முடங்கலைக் கண்டான் பரதன்!  உடனே
புறப்பட்டான் ஆர்வமுடன் தான்.
(தொடரும்)
 
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post