Ticker

6/recent/ticker-posts

88 வருடங்களின் பின் ராஜபக்ஸாக்கள் இல்லாத தேர்தல்..!

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன ?
தேடிய செல்வமென்ன ? திரண்டதோர் சுற்றமென்ன....!
1936 ஆம் ஆண்டில்  அம்பாந்தோட்டை நகர உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த டீ.  எம். ரஜபகச அவர்கள், அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 17,046 வாக்குகளை பெற்றுஅம்பாந்தோட்டை நகர உறுப்பினராக அரசியலை தொடங்கினார். 

இதனையடுத்து டி.ஏ.ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச, ஜேர்ஜ் ராஜபக்ச,  மகிந்த பேஸி ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை தொடர்ந்து ஆக்கிரமிப்புச் செய்தனர்.

இந்த வரிசையில் ரஜபக்ஸவின் இரண்டாம் தலைமுறையாக 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தெரிவாகிய மஹிந்த ராஜபக்ஸ, 2005 ஆம் ஆண்டு வரை சுமார் வருடங்களாக 35  பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2005 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நவம்பர் 19 இல் 2005 ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 20024 ஆம் ஆண்டு வரை இவர் 55 வருடங்கள் பாராளுமன்றத்தில் பதவி வகித்தார்.

இவரின் தெரிவைத் தொடர்ந்து இலங்கையில் குடும்ப ஆட்சி தலைதூக்கியது. இவர் ஜனாதிபதியாக ஆனதை அடுத்து மொத்த இலங்கையும் இவர்களின் வாரிசுச் சொத்தாக மாறியது.

இலங்கை மொத்தமும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் இருந்தது. அண்ணன் ஜனாதி , தம்பி பிரதமர், இன்னும் சில தம்பிமார்கள் அமைச்சர்களாகவும், மகன் ஒரு அமைச்சர், உறவினர்களுக்கு பணப் பசையுள்ள பதவிகள், மூத்த அண்ணனுக்கு  பண ஊற்றெடுக்கும் துறைமுக அமைச்சர் பதவி, என மொத்த ராஜபக்ச  குடும்பமும் இலங்கையை சுற்றி வளைத்து கொள்ளையடித்து சூறையாடியது.

இலங்கையில் நடந்த 30 கால வருட யுத்தம் ராஜபக்ச குடும்பத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. அப்போது ஆயுதக் கொள்வனவில் நடந்த ஊழல்கள் விமானக் கொள்னவுகள் பல ஆயிரம் கோடிகள். இவற்றை அவ்வப்போது மூத்த உதவியலாளர்களான விக்டர்  ஐவன் சுனந்த  தேசப்பிரிய போன்றோர் எடுத்துக் கூறியபோது அவர்களுக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது.  இறுதியில் நாட்டில்  பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். இன்னும் பல ஊடவியலாளர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். 

இவர்களின் ஊழலை மூடி மறைக்க அப்போது மின்சாரக் கதிரை படம் பெரும்பான்மையின மக்கள் மனதில் திரையிடப்பட்டு அத்தனையும் மூடி மறைக்கப்பட்டது. எதிர்த்துப் பேசியவர்கள் பயங்காரவாத முத்திரை குத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள் .
யுத்தம் முடிவுற்ற போது, தொடர்ந்து வரும் ஊழல்களை  மறைத்து பதவிகளை தக்க வைத்துக் கொள்ள இவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒரு  படம் பெரும்பான்மை மக்களின் மனதில் மீண்டும் திரையிடப்பட்டு, நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிரிகளாக இனம் காட்டப்பட்டனர்.

முஸ்லிம்ளின் உயிர்கள் பல பறிக்கப்பட்டன. கோடான கோடி முஸ்லிம்களின் உடமைகள் தீயில் கருகியது. இனவாதத்தின்  உச்சகட்டமாக ஓரு பாரிய சதி வலையின் பின்னணியில் இருந்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடக்கம் மற்றும் உண்மைகள்  முடிவுகள் இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.

இப் பாரிய அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டு, முஸ்லிம் சமூகம் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டது. 

இவர்களின் காலத்தில் பின்புல சக்திகளினால் இனவாதத்தை மேலோங்கச் செய்ய,   பல மத குருக்கள் உட்பட பல குழுக்கள் கூலிக்காக அமர்த்தப்பட்டார்கள். கூலிக்கு அமர்த்தப்படவர்கள் ஏனைய சிறுபான்மை இனத்தினரை இந்த நாட்டினல் பூர்வீகமற்ற வந்தேறு குடிகள் எனவும், அவர்கள் பின்பற்றும் மதங்களையும் கீழ்தரமாக விமர்சனங்கள் செய்யவும் செய்தனர்.

இதற்கு திரை மறைவில் 
இயங்கிய  மறை கரம் உரமிட்டது.

அம்பை எய்தவன் எங்கோ இருக்க ...

பெளத்த விகாரைகள் கோயில்கள் போன்றவற்றிற்கு இரானுப்பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முஸ்லிம் பயங்கராவாதிகள்,  எந்த நேரத்திலும் பொரும்பான்மை மக்கள் மீது தாக்குதல் நடாத்தலாம் எனற அச்சம் பொரும்பான்மை மக்களின் மனதில் ஏற்படுத்ப்பட்டு, நாடில் எந்நேரத்திலும் ஏதும் நடக்கலாம் என்ற ஒரு பதற்றமன நிலைமை நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
இவர்களின் உள்நோக்கம் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற பெயரில், முஸ்லிம் சமூகத்தை பழிவாங்குதாகும். 

இதன் மூலம் பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தி சிந்தனையை வேறுபக்கம் திருப்பி நாட்டை கொள்ளையடித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து நாட்டிலிருந்து இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் திரைப்படம் பெரும்பான்மை மக்களின் மனதில் திரையிடப்பட்டது. இதன் பிரதிபலனாக இலங்கை அரசியல் வரலாற்றுச் சரித்திரத்தில் ஒரு மிகப் பெரிய வெற்றியை செதுக்கும் விதமான வரலாற்று வெற்றியை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டார்.

இவரின் வெற்றி இனவாதத்தின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட ஒரு மாளிகையாக ஜொலித்தது . நாட்டில் சிறுபான்மை மக்கள் சுந்திரமாக நடமாட முடியாத அளவில் இனவாதத்தை விதைத்தார்கள். நாட்டை அபிவிருத்திப் பதையில் இட்டுச் சென்று பதவிகளை பாதுகாப்பதை விடுத்து, இனவாதத்தை நாட்டில் விதைத்து அதன் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ளும் நடை முறையையைக் கைக்  கொண்டார்கள்.

இவர்களின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. இவர்கள்  விதைத்த இனவாதம் வெற்றிகரமாக தழைத்தோங்கியது. மறுபுறம் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் பயங்காரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ஒரு வீரன் ராஜபக்ச குடும்பத்திலிருந்தே உருவானார். இவர்களின் திட்டமும் வெற்றிகாரமாக முடிந்தது.

நாட்டை ஒரு குடும்பம் ஆற்கொண்டு பயங்கரமாக கொள்ளை அடித்தனர். நாட்டை கொள்ளை அடிக்க ஒரு குடும்பமும் ஒன்று கூடியது . 

அனைத்து ஊழல் மோசடிகள் திடமிட்டு அழிக்கப்படன. இலங்கையின் வரலாற்றில் ஆகப் பெரிய மோசடிகள் இவர்களின் காலத்திலேயே நடந்தேறியது.

நாட்டின் ஜனாதிபதி என்பவர் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும்,  மக்களின் வரிப்பணத்தால்  வழி நடாத்தப்படும் மக்களின் சேவகன் என்பதை மறந்து,  ஜனாதிபதி என்பவர் ஒரு கொடுங்கோள் அரசன். மக்கள் என்பவர்கள் அடிமைகள், நாட்டு மக்கள் அடிமைகளாக நடத்தப்படும் ஒரு கலாச்சாரம் நாட்டில் உருவானது
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பூச்சியமாகும் வரை இந்தச் சதிகளை மக்கள் சிந்திக்கவில்லை. அந்தளவுக்கு மக்கள் மூளைச் செலவை செய்யப்பட்டு, நாட்டில் இனவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பெயரில்  அச்சுறுத்தலும் தலைவிரித்தாடின. நாடு படு பயங்கரமாக இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

நாட்டின் அபிவிருத்தி என் பெயரில் நாட்டுக்கா வாங்கப்பட பல கோடி கடன்களின் விபரங்கள் கூட நாட்டின் பதிவுகளில் இல்லை என்ன நிலைக்கு  நாடு தள்ளப்பட்டு, மக்களின் சிந்தனையை வேறுபக்கமாக செய்திருப்பி விலைமதிக்க முடியாத நாட்டின் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு தாரைவார்கப்பட்டன. 

இவர்களது ஆட்சி காலத்தில் இவர்களுடன் சேர்ந்து நாட்டை கொள்ளை அடிக்க மேலும் பல கொள்ளையர்கள் ஒன்று கூடினார்கள். அரசியல்வாதிகள் , அமைச்சர்கள் என்ற பெயரில் நட்டின் சொத்து ஆயிரக்கனக்கான கோடிகள் கொள்ளையிடப்பட்டன.

நாட்டில் அந்நியச் செலாவனி பற்றாக்குறையின் காரணமாக பஞ்சம் தலைவிரித்தாடியது. உணவுக்கவும் எரிபொருளுக்காகவும் மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாட்டின் ஜனாதிபதி என்பவர் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும்,  மக்களின் வரிப்பணத்தால்  வழி நடாத்தப்படும் மக்களின் சேவகன் என்பதை மறந்து,  ஜனாதிபதி என்பவர் ஒரு கொடுங்கோள் அரசன். இலங்கை நாடு என்பது அவர்களின் வாரிசு சொத்து,  மக்கள் என்பவர்கள் அடிமைகள் என, நாட்டு மக்கள் அடிமைகளாக  நடத்தப்படும் ஒரு கலாச்சாரம் நாட்டில் உருவானது.

உரிமைக்காக போராடிய சில மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். அமைச்சர்களின் வாகனங்களுக்கும், அமைச்சர்களின் பிள்ளைகளின் வாகனங்களுக்கும்  மக்கள் வீதியில் அடிபட்டு சாகும் நிலை உருவானது. ஜனநாயகம் என்ற விளம்பரத்தில் அராஜகம் தலை விரித்தாடியது. 
இவர்களின் அநியாயத்தில் இருந்து நாட்டு  மக்களுக்கு விடிவு இல்லயா என மக்கள் சிந்திக்கும் அளவு‌க்கு மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இறுதியில் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக  போராடினார்கள். ராஜபக்ஸ குடும்பத்தை மக்கள்  நாட்டை வி்ட்டு விரட்டியடித்தார்கள்.

இறுதியில் இலங்கை தேர்தல் வரலாற்றில் செதுக்கப்பட்ட மாபெரும் வெற்றி,  மாபெரும் தோல்வியாக தலைகீழாக மாறியுள்ளது. 

88 வருடங்களின் பின் ராஜபக்சக்கள் பங்கு கொள்ள முடியாத ஒரு தேர்தலாக 2024 ஆம்ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மாறி உள்ளது. பெரும் பலம் கொண்டு நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஸ குடும்பம் ஒரு பாரளுமன்ற உறுப்பினர் பதவியை கூட அடைய முடியாத நிலைக்கு இவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

பல தசாப்தங்களாக சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல், இனவாதத்தாலும், வேறு விதமான அச்சுறுத்தல்களாலும் மூச்சுத் திணறி வாழ்ந்த மக்கள் சுதந்திர நாட்டில் சுதந்திர காற்றை சுவாசித்து ஒற்றுமையாக வாழும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

அனைத்து மக்களும் ஒரே இலங்கைத் தாயின் மக்கள், அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாக வாழவேண்டும். சகல இன மக்களும் அவரவர் உரிமைகளுடன் நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற  ஒரு கோசம் ஆளும் ஆரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, திருடர்களும் இனவாதிகளும் மக்களின் முன் தலைகாட்ட முடியாமல், மொத்த அரசியலில் இருந்து ஒதுங்கி, அரசயலை விட்டு ஓடும் நிலைக்கு மாறியுள்ளது.

இன்று ரஜபக்ஸாக்களின் நிலை யாதெனில் கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருபவர்கள் யார் ? என்ற நிலைக்கு இவர்களின் ஊழல்களும்,  இனவாதவமும் இவர்களைத் தள்ளியுள்ளது.

பேருவளை ஹில்மி




 Ai SONGS

 



Post a Comment

0 Comments