Ticker

6/recent/ticker-posts

Ad Code



கடவுளே மோடியின் நண்பர்தான் ஜெய்கனும்.. டிரம்ப்காக சாமியார் சிறப்பு பூஜை - viral video!

தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என சாமியார் ஒருவர் சிறப்பு பூஜை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

உலகமே அதிகம் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இதில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸின் தாய் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் துலசேந்திரபுரத்தை சேர்த்தவர். என்பதால் தேர்தலில் அவர் வெற்றி பெற பல பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடவுளின் அனுக்கிரகத்தை டிரம்ப் பக்கம் திருப்ப டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் சிறப்பு பூஜை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதாவது, மஹாமண்டலேஸ்வர் சுவாமி வேத் முதினானந்த சரஸ்வதி என்ற சாமியார்,
அமரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டெல்லியில் ஹாவன் எனப்படும் பூஜையை நடத்தியுள்ளார். அதில், மோடியின் நண்பர் டிரம்ப் என்ற வாசகங்களுடன் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

0 Comments