Ticker

6/recent/ticker-posts

Ad Code



சீரான வாழ்க்கை முறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த நேர்வழியின் பிரகாசம் முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே 'உம்மத்தா'க மாற்றிவிட்டது.

 

உம்மத்துக்கள், சொத்து, சுகம், செல்வம், மனைவி, மக்களுக்காகச் செயல்படுபவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக அல்லாஹ்வும், அவனது தூதரும் என்ன கூறுகின்றனரோ அவற்றை மதித்து நடந்தவர்களாக இருந்ததால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

கொடுக்கல் வாங்கல்களிலும், சமூக வாழ்கையிலும்  ஏற்படும் சீர்கேடுகளே  உம்மத்தின் ஒற்றுமையச் சீர்குலைக்கும் முக்கிய காரணமாகும்.

ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் மற்றவர் உரிமையை அவனுக்குக் கொடுக்காது அநீதியாக நடந்து கொள்கின்றான்; அவனைத் துன்புறுத்துகின்றான்; அவனை அவமரியாதை செய்கின்றான் அல்லது இழிவு படுத்துகின்றான் என்றால் உம்மத்துக்குள் பிளவு ஏற்பட்டு ஒற்றுமை குழைகின்றது என்பதுதான் அதன் பொருளாகும்.

சீரான கொடுக்கல் வாங்கல், அழகிய சமூக வாழ்க்கை, அனைவரையும்  கண்ணியப் படுத்துதால்; இவற்றின் மூலம்தான் ஒற்றுமை உருவாகின்றது!

"நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் கருத்து வேறுபட்டு,  நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்" என்று திருக்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயத்தின் நூற்றிமூனாம் வசனத்தில் அல்லாஹ் குறிப்புடுகின்றான்.

அத்துடன்,  "எவர்கள் பிளவுபட்டு, பிளவை உண்டுபண்ணும் செயல்களின் மூலம் சமூகத்தைச் சீர்குழைப்பார்களோ  அவர்கள் மறுமை நாளில்  முகம் கறுத்தவர்களாக எழுப்பப்படுவார்கள். 'ஈமானை, இஸ்லாத்தை எற்றுக்கொண்ட பின்னரும்  நிராகரிப்போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்; இப்பொது நீங்கள் நரகின் தண்டனையை சுவைத்துக்கொள்ளுங்கள்' என்று அவர்களிடம் கூறப்படும்" என்பதாக அதே அத்தியாயத்தில் தொடர்ந்து வந்துள்ள வசனத்தில் அல்லாஹ் நரகின் தண்டனை பற்றி எச்சரிக்கை தருகின்றான்.

நிச்சயமாக ஒருவரை இழிவு படுத்துதல், ஏளனம் செய்தல், துருவித் துருவி அவனது குறைகளைத் தேடுதல், புறம் பேசுதல் ஆகிய அனைத்தும் சமூகத்தினுள் பிரிவினையை உண்டு பண்ணி, உம்மத்தைப் பிளவுபடுத்தும் செயல்களாகும்!

உம்மத்தைப் பிளவுபடுத்தும் சகல வழிகளிலிருந்தும் நகர்ந்து, ஐக்கியத்தின் பக்கம் சமூகத்தை சீரமைக்கும் பணியில்  நமது கவனத்தைச்  செலுத்துவது, காலத்தின் தேவையாகும்!

ஐ,ஏ,ஸத்தார்


 



Post a Comment

0 Comments