Ticker

6/recent/ticker-posts

பலஸ்தீனத்துக்காக, இஸ்ரேலைக் கண்டித்துப் பேசிய ஜனாதிபதி!, யுத்த நிறுத்தம் வேண்டி ஐ.நா.விடம் கோரிக்கை!


இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா கடந்த 2024.10.10 அன்று  ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திச்ராயக்காவை சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பலஸ்தீன அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில், இலங்கை பின்பற்றிய நிலையான நடவடிக்கைகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இலங்கையின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் பேண பலஸ்தீன் எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் வலியுறுத்தினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் பாலஸ்தீன தூதுவராலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் எவருமே, பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் செய்துவரும் அநியாயங்களை எதிர்த்துப் பேசியதில்லை.

நம் நாட்டில் இதுவரை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் கூட  இஸ்ரேல் செய்வது பிழை என்று இன்றுவரை ஆணித்தரமாகப் பேசியதில்லை.


மேலும் பலஸ்தீன் மக்களை,  பெண்கள் - சிறார்கள் என்று கூடப் பார்க்காமல்  இஸ்ரேல் அநியாயமாக கொலை செய்து வருவதையும் அவர்கைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் எவருமே ஒரு பொருட்டாகக் கணித்துப் பேசியதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட, பணத்தின் மூலம் உதவி செய்தாரே தவிர, தற்போதைய ஜனாதிபதி பேசியுள்ள அளவுக்குக் கண்டித்து பேசவில்லை.

அதற்குக் காரணம் என்னவென்றால் நாம் எதிர்த்து பேசினால் அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் நாடுகளை பகைத்துக் கொள்ள வேண்டி வரலாம்  என்ற பயம்!

ஆனால் தனது விஜயத்தின்போது, ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்க எவருக்கும் பயப்படாமல் நியாயத்தைப் பேசினார். ஐக்கிய நாடுகள் சபைக்கும் இந்தக் கொடூர இன அழிப்பை நிறுத்த வகை செய்யும்படு வலியுறுத்தினார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. அதனை இங்கு நாமும் பதிவிடுகின்றோம்!




 Ai SONGS

 



Post a Comment

0 Comments