Ticker

6/recent/ticker-posts

மியான்மர் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025ல் என்ன நடக்கும்? பயமுறுத்தும் கணிப்புகள்!


மார்ச் மாதம் 28ஆம் தேதி மியன்மரில் மிகப்பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கிட்டதட்ட 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இடி பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தை முன்பே ஒருவர் கணித்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 

ஆம், மறைந்த பாவா வங்கா என்பவர் உலகில் நடக்கவிருக்கும் பல விஷயங்களை முன்பே கணித்து இருக்கிறார். அதில் இதுவும் ஒன்று. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் முதல் இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், கொரானா உள்ளிட்ட உலகின் முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்து உள்ளார். இவர் கூறிய பல விஷயங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் நிகழ இருக்கும் விஷங்களை கணித்துள்ள நிலையில், அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 

பாவா வங்காவின் எதிர்காலக் கணிப்புகள் சுவாரஸ்த்தை கூடினாலும், அதேசமயம் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பேரழிவானது, 2025ல் இருந்து தொடங்கும் என அவர்  கணித்து இருக்கிறார். அவற்றின் ஒன்றாக தற்போது மியான்மர் மற்றும் தாய்லாந்து நிகழ்ந்து இருக்கிறது. இது பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், தொடர்ந்து நிலநடுக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதி வரை இயற்கை பேரழிவுகள் இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு மோதல் ஏற்படும் என்றும் அதில் மக்கள் பலர் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். 

வரும் ஆண்டுகளில் என்ன நடக்கும் 

வரும் 2028ஆம் ஆண்டில் மனிதன் வீனஸ் செல்வான், பசி ஒழியும் என அவரது கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2043ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2066ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்க உருவாக்கும். 76ல் சமூகத்தின் சாதி கட்டமைப்பு ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது. 

யார் இந்த பாபா வங்கா

பல்கோரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவர் புயலில் சிக்கியதால், 12 வயதில் தனது கண் பார்வையை இழந்துள்ளார். இந்த சோகமான சம்பவத்திற்கு பிறகு அவர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இவர் 1996ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால் இவரது எதிர்கால கணிப்புகள் கேட்பவரை உறைய வைத்துள்ளது.   

zeenews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments