Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-35


உடம்போடு அழிந்துபோகக்கூடிய வெறும் போலியாயுள்ள குல வேறுபாடு ஒன்றே பல வகைத் தீங்குகளைப் பயப்பவையாகும்.

அன்பு என்பது இயல்பாகவே மனிதருக்குள் இருக்கும் ஒரு இரக்க உணர்ச்சி. அது பிறர் துன்பப்படுவதை அறிந்த உடனேயே அடக்கி வைக்க முடியாதபடி துடித்தோடி வந்து. துன்பப்படுகின்றவர்கள் துயரத்தில் பங்கு கொள்ளும், அப்போது தானாகவே கண் கலங்கும். அந்தக் கண் கலக்கத்திலே வெளிப்படுகின்ற சிறு துளி கண்ணீரே அன்புடைமைக்கு ஓர் அறிகுறியாகும். 

அன்பு என்பதுதான் ஒருவரை ஒருவர்விரும்புகின்ற பிரியத்தை உண்டாக்குவது. அந்தப் பிரியத்தினால் நட்பு என்ற உறவு தானாகவே உண்டாகும். தர்மமான நல்ல காரியங்களைச் செய்வது தான் அன்பு என்பதைச் சேர்ந்தது. அதர்மமான தீய காரியங்களையும் அன்புக்காக செய்யலாம் என்ற எண்ணம் கூடாது.

சூரிய வெப்பம் எலும்பில்லாத உயிர்களாகிய புழுக்களை துடிதுடிக்கச் செய்வது போல, தருமம் என்ற தெய்வம் அன்பில்லாத உயிர்களாகிய மனிதர்களைத் துடிதுடிக்கச் செய்துவிடும். எனவே, மனதில் அன்பில்லாத மனிதனுடைய வாழ்க்கை, மிகவும் கெட்டியான தரையில் முளைதுவிட்ட மரம் தழைத்து செழிக்கும் என்று எதிர்பார்ப்தைப் போன்றதாகும்.

இவ்லாதவர்க்கு,உடம்பின் உள்ளே அமையவேண்டிய அங்கமாகிய அன்பு வெளியே காணப்படுகின்ற மற்ற அங்கங்களெல்லாம் எவ்வளவு அழகாக அமைத்திருந்தாலும் அது அழகாகாது. எனவே அன்புடையவர்களாக நடந்து கொள்கின்ற மனிதர்கள்தான் உயிருள்ளவர்கள். அப்படி அன்பில்லாதவர்கள் அவர்களது உடம்பு வெறும் தோவால் போர்த்தப் பெற்ற எலும்புதாள்". என தன்னை நாடி வந்தவர்களுக்கு, இறைவனது அருளும், அன்பு பற்றிய நல்ல கருத்துரைகளையும் அன்போடு கூறினார் திருவள்ளுவர்.

ஆசிரியர் திருவள்ளுவர், நெஞ்சம் நெகிழ்ந்துருக அருள்வழியாய் நின்று தன்குரைத்த அருமையுரைகள் நாடெங்கும் பரவத் தொடங்கின. அரசியல், அமைச்சர், நாடு படை, குடி, நட்பு என பலவகைக் கருத்துக்களை, தன்னை நாடிவந்த அனைவருக்கும், மனதில் பதியும் படியாகவும் தெளிவாகவும் எடுத்தோதினார் வள்ளுவர்.

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments