Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-74


அவர் அவர் பேச்சை மாற்றிப் பேசிக் கொண்டனர் வேலைக்குச் சென்ற கணவன் மாரும் பகுதி வகுப்புக்குப் போன பிள்ளைகளும் வந்து விடவே அவர்களைக் கவனிக்கப் பிரிந்து சென்றனர்.

லூசியாவும் வந்து பிள்ளைகளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.

எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்து விட்டு பலாகாரம் கொண்டு வைத்தாள் மூத்தவள் சின்னவள் பூரிக்கு மாவு தயார் செய்யத் தொடங்கினாள் .

அப்போது அவளது மகள் சொன்னாள் "அம்மா பூரிக்கு உருழைக்கிழங்கு மசியலோடு சிக்கன் கறியும் செய்யுங்கள் எனக்குப் பிடிக்கும்" என்று,

"அடியேய் இப்போ எங்கடி கோழி கிடைக்கும்" என்றாள் மகளைப் பார்த்து சின்னவள். 

"பாட்டி சொன்னாங்க நேற்று நம்ம சேவலைச் சமைக்கவாம் என்று தெரியாதா?" என தாயிடம் கேட்டாள் மகள்.

"இல்லையே உண்மையாகவா அத்தை" என மாமியாரைப் பார்த்துக் கேட்டாள் மூத்தவள்.

"ஆமாம் சொன்னேன் இவள் இப்போதே கேட்காளே சரி பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடுங்க" என்றார் பாட்டி.

" அட கோழிக் கறியும் பூரியுமா நானும் வருவேன் சாப்பிட சரியா என்று சொல்லி விட்டுக் கண் சிமிட்டினாள் லூசியா  ஓ அப்போ வா வந்து தேங்காயைத்  துருவு என்றாள் சின்னவள்.

"என்ன? அக்கா பூரிக்கு வேலை வாங்கும் எண்ணமா?" எனக் கேட்டுச்
சிரித்து விட்டு வந்து உதவி செய்து கொடுத்தாள். 

பின்னர் தன் வீட்டுக்குப் போவதாய்க் கூறி சென்று விட்டாள். லூசியா  போனதும் பிள்ளைகள் வீட்டுப் பாடத்தில் கவனம் எடுக்க தகப்பன் மார் கண் கானிக்க மருமக்கள் இருவரும் கோழியைப் பிடித்து அறுத்து அழகான சுவையான கமகம கறியும் பூரியும் செய்து முடித்தனர்.

சேர்ந்தே அமர்ந்து பேச்சும் சிரிப்புமாய்ச் சாப்பிட்டார்கள், லூசியா மட்டும் இணையவில்லை  கதை கேட்கும் போது சாப்பிடுவதாய்ச் சொல்லியே சென்றாள் இரவு உணவை முடித்த கையோடு பாடசாலை உடைகளை தயார் செய்து வைத்து விட்டுக் குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு ஒரு புத்துணர்ச்சியோடு இரு மருமகளும் முற்றத்தில் அமர்ந்தார்கள்

 மேரி அக்கா லூசியா இருவரையும் அழைத்து விட்டுக் கூடி அமர்ந்து கொண்டனர் .பாட்டியும் வெத்தலையைப் போட்டுக் கொண்டே தலையணையைக் வாங்கி எடுத்துக் கொண்டு சாய்ந்து கொண்டார். கதை சொல்லத் தயார் நிலையில் எல்லோரும் பேச்சை நிறுத்திக் கதைக்குக் காது கொடுக்கத் தயார் நிலையில் இருந்தார்கள்.

(தொடரும்)  

Email;vettai007@yahoo.com



Post a Comment

0 Comments