Ticker

6/recent/ticker-posts

66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்! இரும்பு பெண்தான் பாேல..


Woman Gave Birth To 10th Baby At 66 Age : ஜெர்மனியை சேர்ந்த 66 வயது பெண் தான் அலெக்ஸாண்ட்ரா hilderbrant  . இவர் அங்குள்ள ஒரு அருங்காட்சியகத்தின் இயக்குனராக இருக்கிறார்.1959 ஆம் ஆண்டு பிறந்த அலெக்சாண்ட்ரா 1995 இல் rainer hilderbrant என்பவரை திருமணம் செய்து கொண்டார். berin wall museum இன் நிறுவனரான இவர் கடந்த 2004ஆம் ஆண்டு தனது 90 வது வயதில் காலமானார். இந்த தம்பதிக்கு இரண்டு 45 மற்றும் 36 வயதில் ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர்

இதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்ட அலெக்ஸாண்ட்ரா. தற்போது இவர்களுக்கு ஒரு இரட்டை குழந்தைகள் உட்பட 7 குழந்தைகள் இருந்தது. இந்த நிலையில் தான் அலெக்சாண்ட்ரா மறுபடியும் கர்ப்பமாகியுள்ளார். 66 வயது ஆகிவிட்டது நிச்சயமாக ஐவிஎஃப் செய்திருப்பார் என்று பார்த்தால் அதுதான் ஆச்சரியம்.. ஐ வி எஃப் இல்லாமலேயே இயற்கை முறையில் கருத்தரித்திருக்கிறார் அலெக்ஸாண்ட்ரா.

இந்த நிலையில் தான் மார்ச் 19 அன்று பெர்லினில் உள்ள சாரிடே மருத்துவமனையில் சிசேரியன் மூலம் தனது 10வது  குழந்தையை பெற்றெடுத்தார் அலெக்சாண்ட்ரா. அந்த ஆண் குழந்தை 3அரை கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது. மேலும் இந்த குழந்தைக்கு பிலிப்ஸ் என்று பெயரிட்டுள்ளார் தாய் அலெக்சண்ட்ரா. ஏற்கனவே முதல் கணவரிடமிருந்து இரண்டு குழந்தைகள் இரண்டாவது கணவரிடம் இருந்து 7 குழந்தைகள் ஃபுல் படம் மொத்தம்  9 குழந்தைகள் இருக்கும் நிலையில் பத்தாவது குழந்தையாக பிலிப்ஸ்ம் சேர்ந்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அலெக்ஸாண்ட்ராவின் முதல் மகளுக்கு 46 வயது ஆகிறதாம், இரண்டாவதாக பிறந்த மகனுக்கு 36 வயது ஆகிறது இப்படியே 12 வயதில் இரட்டையர்கள்,10 ,8,7,4,2 என இந்த லிஸ்ட் சென்று கொண்டே இருக்கிறது

இது குறித்து அலெக்சாண்டரா கூறுகையில் "நான் மிகவும் ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன், ஒரு மணி நேரம் தவறாமல் நீந்துவேன், இரண்டு மணி நேரம் நடப்பேன்," அதனால்தான் இப்போதும் என்னால் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது என்றார் மேலும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்"ஒரு பெரிய குடும்பம் என்பது அற்புதமான ஒன்று மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளை முறையாக வளர்ப்பதற்கும் அது முக்கியம்," என்று கூறியுள்ளார். மேலும் தனது பயாலஜிக்கல் வயது 35 தான் என்கிறார் இந்த 66 வயது பெண்மணி

இது குறித்து பேசி உள்ள அலெக்சாண்டராவின் மகப்பேறு மருத்துவர் வொல்ப்காங் ஹென்ரிச் பெரும்பாலும் அவருக்கு சிக்கலற்ற கர்ப்பம்" இருப்பதாகக் கூறினார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அதிக வயதான பெண்களுக்கு மகப்பேறு சற்று சிக்கல்தான் என்கின்றனர் மருத்துவர்கள் குறிப்பாக வயதாகி பிரசவிக்கும் போது முன்கூட்டிய குழந்தை பிறப்பு, இருதய பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றில் ஒட்டுதல்கள் போன்ற  சிக்கல்கள் பொதுவாக அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் பிரசவங்களைச் செய்தவர்களுக்கு அதிக ஆபத்துகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 66 வயதில் தனது பத்தாவது குழந்தையை இயற்கை முறையில் ஆரோக்கியமாக பெற்றெடுத்த பெண்ணின் செய்தி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

zeenews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments