
சுமார் நான்கு மணி போல் எழுந்து தேநீர் குடித்து விட்டு மீதமுள்ள வேலையில் கவனம் செலுத்தும் போது லூசியா வந்தாள். வந்தவள் மேகமாய் சின்ன மருமகள் அருகே போய் ஏதோ காதைக் கடித்தாள்.
உடனே சின்னவள் "அடி ஆத்தி என்னடி இப்படி சொல்லுகிறாய்" என்றாள்
"அக்கா கத்தாதே" என்று லூசியா அவளது கையைப் பிடித்தாள்.
சின்னவளின் குரல் கேட்டதும் மூத்த மருமகளும் அருகே வந்து விட்டாள். "என்னாச்சு டி இரண்டு பேரும் இஞ்சி திண்ட குரங்கைப் போல் திருட்டு முழி முழிப்பது. ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே" என்றாள்.
உடனே "ஐயோ நான் இந்த விளையாட்டில் இல்லை. அப்புறம் மேரி அக்கா என்னை வச்சி செய்திடுவார் நீங்களே அவளிடம் கேளுங்கள்" என்றாள் சின்னவள்.
"சரி என்ன என்று யாராவது கூறுங்கள் பார்ப்போம்" என மூத்த மருமகள் சொல்லவே, லூசியாவைப் பார்த்தாள் சின்னவள். 
"லூசியா திக்கு வாய்ப் பெண்ணாக நின்று உளறுகிறாள் இல்லை அக்கா. அது வந்து நம்ம ரிஸ்வின் இருக்கானே" என்று ஆரம்பித்ததும் "நம்ம ரிஸ்வினா?,நம்மட இல்லை உன் தோழன்" என்றாள் மூத்தவள்.
 உடனே லூசியா அதுதான் அவனைத் தெரியும் தானே உங்களுக்கு அதனால்த் தான் நம்மட என்று ஆரம்பித்தேன் என பதில் கொடுத்தாள் லூசியா சரி அவனுக்கு என்னாச்சு இப்போ என மூத்தவள் கேட்டாள் ம்க்கும் அவனுக்கு ஒன்றும் இல்லை அக்கா இவள் மேலே லவ்வாம் என கூறினாள் சின்னவள்.
"அடடா இது எப்போ இருந்தாம்? சரி இப்போ ஏன் உன் காதைக் கடிக்காள். என்ன வெளியே பொய் சொல்லிக் கூட்டிப் போகச் சொன்னாளா? இல்லை நீ தான் காதல் தூதா? எனக்குப் புரியல" என்றாள் மூத்தவள்.
"ஐயோ அக்கா நீங்க வேறு கற்பனையில் இறங்கி எனக்குப் பாட்டு வாங்கித் தராமல் அவளிடம் முழுமையாகக் கேளுங்கள்" என்றாள் சின்னவள்.
"சரி சொல்லு" எனக் கூறி லூசியாவைப் பார்த்தாள்.
"அவன் என்னை விரும்புவதாய்ச் சொல்லி இரண்டு ஆண்டு அக்கா. நான் தான் இன்னும் முழுமையாகப் பதில் கொடுக்கவில்லை. அதனால் அவன் நாளை தன் அண்ணியோடு என்னைப் பார்க்க வருவதாய்ச் சொன்னான் அம்மாவிடம் சொல்லப் பயமாய் இருக்கு".
"சரி நாங்க என்ன செய்ய" என்றாள் மூத்த மருமகள்.
"நீங்க ஒன்றும் செய்ய வேணாம் அவன் இங்கே தான் வருவான் அதை சொல்ல வந்தேன் ஏன்டி இங்க வருவான் இந்த வீட்டு விலாசம் தானே கொடுத்தேன்" என்றாள் லூசியா.
" அடி பாவி அத்தைக்குத் தெரிந்தால் பேயாடி பந்தல் பிரிப்பார் ஏன்டி உனக்கு இந்த வேலை" என்றாள் சின்னவள்.
" அதுதானே" என்றாள்  பெரியவள்.
"அதுக்கு ஒரு காரணம் இருக்கு அக்கா அவனை இங்கு உள்ள அனைவரும் பார்த்தோம்  அவன் திடிர்னு ஒரு வேலையாக வந்ததாகவும் நம்ம ஞாபகம் வரவே சந்திக்க வந்ததாகவும் சொல்வான் அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் அம்மாவும் நானும் ச்சும்மா வருவது போல் வருவோம் இங்கே இருந்து பேசும் போது அம்மா சந்தேகம் கொள்ள மாட்டார்.அவங்க அண்ணியும் என்னைப் பார்த்து விடுவார். இதுதான் ஐடியா" என்று லூசியா கூறி முடித்தாள்.
"நரி மூளை அக்கா இவளுக்கு" என்றாள் சின்னவள்.
"ம்ம்ம் சரி வரட்டும் பார்ப்போம் நாளை அது வரை படம் ஓட்டி எங்களையும் மாட்டி விடாமல் போய் இரு" என்றாள் மூத்தவள். அதோடு ரிஸ்வின் பேச்சு முடிந்தது
(தொடரும்) 

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments