Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-34


அவ்வள்ளுவனும். இது தமக்குக் கிடைத்தப் பெரும் பேறு எனக் கருதி. இக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் படியாக நன்கு கற்க வைத்தான். குழந்தையான வள்ளுவரும் தனது வளர்ப்புத் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கல்வியில் பேராற்றலோடு வளர்ந்தார். வள்ளுவர் குவத் தலைவனால் வளர்க்கப்பெற்றமையாலேயே இக் குழந்தையை ' திருவள்ளுவரி" என்றே அப்பகுதியைச் சார்ந்த மக்கள் அழைத்தனர். அதுவே இவரது பெயராகவும் நாளடைவில் நிலைபெற்றது.

தாம் இளம் பருவம் அடையும் முன்னரே அருந்தமிழ் வளம் பெற்று அருளிரக்கம், பொறுமை, சொல் மாட்சி பெற்று விளங்கினார் திருவள்ளுவர். இதனாலே, பல மாணவர்கள் இவரிடம் வந்து பாடமும் அறிவுரைகளையும் கேட்க ஆரம்பித்தனர். திருவள்ளுவரும் தம்மிடம் அறிவு தாகம் எடுத்து வந்த மாணவர்களுக்கு நல்ல பல அறிவுரைகளைக் கூறினார்.

'மனிதர்களும், மிருகங்களும் கடவுளது திருவருள் வெள்ளத்தல் உதித்த உயிர்கள். அத்தகைய இறைவனின் திருவுளப்படி நடக்காது, மனிதர்கள் எல்லாம தமக்குள் பல வேற்றுமைகளை ஏற்படுத்திக் கொண்டு, கோபம், பொறாமை, உயிர்வதை, கொலை, கொள்ளை முதலான தீய செயல்களைச் செய்து மக்களெல்லாம் மாக்களாக மாறுவது சரியன்று." இறைவன் திருவருள் ஒவ்வொரு அணுவிலும், எலும்பில்லாதப் புழுவிலும் ஊடுருவி நிறைந்து நிற்கிறது. எனவே எல்வா உயிர்களும் மதிக்கப்படுபவன ஆகும். இதில் நான் உயர்த்தவன், நீ தாழ்ந்தவன், நான் பணக்காரன். நீ ஏழை என்னும் எண்ணம் எவரது மனதிலும் உதித்தல் ஆகாது. ஒருவர் அன்பாக மற்று ஒருவரிடம் பழகினால், அவர் தம் எலும்பையேத் தந்தும் கூட, தம்மிடம் அன்புடன் நடந்து கொள்பவரை வாழவைப்பர். ஒருவன் தன்னை உயர்வாகவும் மற்றவரைத் தாழ்வாகவும் எண்ணுகின்ற இடத்தில், தான் செருக்குற்று, மற்றவர்களிடம் அன்பில்லாதவாறு நடக்கத் தோன்றுகிறது. தன்னைவிடத் தாழ்ந்த ஒருவன். கல்வியினால் சிறந்து விளங்கினால், அவனைத் தாழ்த்துவதற்கு தீய செயல்களை புரித்துவிடல் எண்ணுதல் கூடவே கூடாது. 

(தொடரும்)


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments