
உன்னை நினைக்கும் நேரத்தில்
என் உணர்வுகள் தூங்காது
என் உயிரே என் உயிரே
என்றென்றும் என் வாழ்வில்
நீ வேண்டும் என் உயிரே
என் உயிரே
நீ யாரோடும் பேசும் போது
என் நெஞ்சம் தாங்காது
என்னுள் புண்ணாகி போகும்
ஆரிரோ யார் பாடினாலும்
என் உணர்வுகள் தூங்காது
என் உயிரே என் உயிரே
என் அருகில் நீ இருந்தால்
என் நாட்கள் என்றும்
வசந்தம் ஆகாதோ
நொடி நேரம் பிரியாது
வாழ்தல் கூடாதோ
என் மூச்சினில் நீயும்
உன் மூச்சினில் நானும்
வாழ்தல் கூடாதோ
என் காதல் வெள்ளத்தில்
நீ மூழ்கித்தான் போகும்
நாள் அமையாதோ
என்னோடு என்றும்
உன் மீதான அன்பை
வளர்த்துக்கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
பேசிக்கொண்டேனே
மதிமயக்கும் மொழியழகே
என் உணர்வில் நீ என்றும் இருப்பாயே ..
நான் எங்கே சென்றாலும்
நீ அங்கே நினைவாக வருவாயே
நினைவெல்லாம் நீயேதான்
நீயே தான் என் உயிரே
என் உயிரே..
சஹ்னாஸ் பேகம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments