Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-88


445. வினா : பண்பு இல்லாதவன் பெற்ற செல்வம் என்னவாகும்?
 விடை: நல்ல பால் பாத்திரத்தின் குறையால் கெடுவது போலாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.(1000)

446. வினா : யாருடைய வாழ்வு நிலத்திற்குச் சுமை?
விடை: புகழின்றி வாழ்பவன்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.(1003)

447. வினா : கோடி செல்வமிருந்தும் பயனில்லை யாருக்கு? 
விடை : பிறர்க்கும் உதவாமல், தானும் அனுபவிக்காமல்இருப்பவனுக்கு.

கொடுப்பதூஉம் துய்ப்பதுஉம் இல்லார்க்குஅடுக்கிய கோடி உண் டாயினும் இல் .(1005)

448. வினா : மணமாகாத பெண் முதுமை பெற்றது போன்றது எது?
விடை : ஏழை மக்களுக்குக் கொடுத்துதவாத செல்வம் 

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.(1007)

449. வினா : நடுவூருள் நச்சு மரம் போன்றது எது?
விடை: பிறரால் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம் 

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.(1008)

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments