Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கையில் அதிகரித்து வரும் ஆட்டிச(autism)நோய்!


இலங்கையில் ஆட்டிச(autism)நோயால்  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

"கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ள்ளது.,இது குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இப்போது, ​​ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்றஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில் 

"உலகில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  இலங்கையிலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். அதை மிக விரைவாக அடையாளம் காண்பது முக்கியம். ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காண முடிந்தால், 90% மக்களை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சரிசெய்ய முடியும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments