
அமெரிக்காவின் வரிக் கொள்கை 12.2 ஆக இருந்த இலங்கைக்கான வரி வீதத்தை 44%ஆக அதிகரித்துள்ளது.
இது இலங்கையின் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் நாணய ஸ்திரத்தன்மைக்கு பெரிய சவால்களை உருவாக்கலாம் என்று ஹேஸ்யம் கூறப்படுகின்றது.
2022 பொருளாதார நெருக்கடி, கடன் திவால்தன்மை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக, அமெரிக்கா இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நம்பாமல் போதும், டிரம்ப் & பைடன் ஆட்சிகளின்போது அமெரிக்கா America First கொள்கையை பின்பற்றியதும், சீனா, இந்தியா போன்ற நாடுகளுடனான இலங்கை போன்ற நாடுகளின் வர்த்தக உறவைக் குறைக்க முற்படும் சூழ்ச்சியே, அமெரிக்கா பல நாடுகளுக்கு அதிக வரி விதிப்பை விதிக்க முற்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இலங்கையின் ஏற்றுமதி குறைதல்:
அமெரிக்காவுக்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக துணி, தேயிலை, ரப்பர் பொருட்கள் இருப்பதால், அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு, இலங்கையின் போட்டித்திறனைக் குறைத்துவிடும் நிலையை ஏற்படுத்தச் செய்வதால், ஏற்றுமதி வருவாய் குறையும். இதனால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படலாம்.
வெளிநாட்டு நாணய வருவாய் சிக்கல்:
ஏற்றுமதி குறைவது டொலர் வருவாயைக் குறைக்கும், இது ஏற்கனவே பாதிக்கப்பட்ட இலங்கையின் வெளிநாட்டுச் சரக்கு இருப்பு நிலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
இதன் விளைவாக எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான கொள்முதல் திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை பாதிப்பு:
ஆடைத் துறை போன்ற ஏற்றுமதி சார்த்த தொழில்களில் வேலை இழப்புகள் ஏற்பட்டு,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம்.
மாற்று சந்தைகளைத் தேடுதல்:
இலங்கை அமெரிக்காவுக்குப் பதிலாக இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுடன் ஏற்றுமதியை மேம்படுத்த முயற்சிப்பது காலத்தின் தேவையாகும். ஆனாலும், இதனை குறுகிய காலத்தில் மேற்கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல.
பொருளாதார மீள்தகுதிக்கான சவால்:
ஏற்கனவே கடன் பிரச்சினைகள் மற்றும் ஊழல் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்த அதிகப்படியான வரிவிதிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நேரடி வெளிநாட்டு முதலீட்டில் (FDI) தாக்கம்:
இந்த அதிக வரிவிதிப்பானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும் நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.
இதை சமாளிக்க, இலங்கை பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சந்தை வேறுபாட்டிற்கு (Market Diversification) தீவிரமாக செயல்பட வேண்டி ஏற்படலாம்.
பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகளின்படி, வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் இதில் மாற்றம் ஒன்று வரலாம் என நம்பப்படுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம்!
ஐ ஏ ஸத்தார்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments