
ஹாங்காங் அஞ்சல் சேவை அமெரிக்காவுக்குப் பொருள்களை அனுப்புவதையும் அங்கிருந்து பெறுவதையும் நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.
கடல்வழி வரும் பொருள்களை இப்போது முதல் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அது சொன்னது.
விமானத்தில் வரும் பொருள்கள் வரும் 27ஆம் தேதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
கடிதம் போன்ற ஆவணங்களுக்கு அந்த மாற்றம் பொருந்தாது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதிலடி வரித் திட்டங்களை அறிவித்தது துன்புறுத்தல் நடவடிக்கை என ஹாங்காங் கூறியது.
அமெரிக்காவின் சார்பாக எந்த வரிகளையும் விதிக்கப்போவதில்லை என்று ஹாங்காங் போஸ்ட் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கான அஞ்சல்களைப் பயனீட்டாளர்களிடமிருந்து இனி ஏற்கப்போவதில்லை என்றும் அது குறிப்பிட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments