Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஓய்வின்போது மூளையும், மனதும் என்ன செய்து கொண்டிருக்கும் தெரியுமா.? கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!


மனித உடலில் உள்ள நகரும் மற்றும் நகராத உறுப்புகள் ஆகிய அனைத்துமே தங்களுக்கே உரித்த தனித்துவமான திறன்களையும், பொறுப்புகளையும் கொண்டுள்ளன. மனித உடல் அமைப்பு பற்றி பேசும்போது மூளை மற்றும் மனது ஆகிய இரண்டையும் நம்மில் பலர் குழப்பிக் கொள்கிறோம். ஒன்றுக்கு பதிலாக ஒன்றை தவறாக எண்ண நேரிடுகிறது. எனினும் இவை இரண்டுமே உண்மையில் வித்தியாசமானவை. ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளது.

ஓய்வில் இருக்கும் போது மனது மற்றும் மூளையின் நிலை ஆச்சரியமூட்டும் விதமாக உங்களுடைய மனது ஓய்வில் இருக்கும் போது, மூளை வேலை செய்வதை நிறுத்தாது. அதற்கு பதிலாக மூளை டீஃபால்ட் மோட் நெட்வொர்க் (DMN) என்ற நிலைக்கு செல்கிறது. டீஃபால்ட் மோட் நெட்வொர்க் என்பது திட்டமிடல், ஞாபகங்களை மீண்டும் கொண்டு வருவது, சுயபரிசீலனை மற்றும் புத்தாக்க திறன் போன்றவற்றின் போது ஆக்டிவாக இருக்கக்கூடிய மூளையின் பகுதிகளின் தொகுப்பு.

டிஃபால்ட் மோட் நெட்வொர்க் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட வேலையில் மூளை கவனிப்பு செலுத்தாத போது அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மூளையின் பகுதிகளே டிஃபால்ட் மோட் நெட்வொர்க்.

டீஃபால்ட் மோட் நெட்வொர்க்கின் பங்கு என்ன?

*ஒருவர் தன்னைப் பற்றி யோசித்தல், அனுபவங்கள் மற்றும் தனிநபரின் அடையாளம் போன்றவற்றை பற்றி சிந்திப்பதில் DMN முக்கிய பங்கு கொண்டுள்ளது.

*DMN பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து, புதிய ஞாபகங்களை உருவாக்கி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறது.

*DMN பிறருடைய யோசனைகள், உணர்வுகள் மற்றும் நோக்கங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.

*ஏதாவது மோசமான ஒரு நிகழ்வு அல்லது அதிர்ச்சியின் போது நம்முடைய மனது வேலை செய்யாது. அந்த சமயத்தில் பிரச்சனையை சமாளிப்பதற்கு மற்றும் உணர்வுகளை கையாளுவதற்கும், பிரச்சனைக்கான தீர்வுகளை பெறுவதற்கும் இந்த DMN உதவி புரிகிறது.

*மனது அலை பாய்ந்து கொண்டிருக்கும் போது அல்லது பகல் நேரத்தில் நீங்கள் ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுது DMN ஆக்டிவாக இருக்கும்.

நாம் ஓய்வில் இருக்கும் பொழுது மூளை என்ன செய்து கொண்டிருக்கும் நாம் எந்தவிதமான செயல்பாட்டில் ஈடுபடாமல் இருக்கும் போது அல்லது தூங்கும் போது கூட நம்முடைய மூளை ஆக்டிவாக இருக்கும். தகவல்களை செயல்படுத்துதல் மற்றும் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் மூளை ஈடுபடும். ஓய்வில் இருக்கும் பொழுது மூளையின் ஒரு சில பகுதிகளுக்கு அதிலும் குறிப்பாக DMN-க்கு அதிக ரத்த ஓட்டம் இருக்கும். DMN ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலை பயன்படுத்துகிறது. நீங்கள் ஒரு வேலையில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் போது பயன்படுத்தப்படும் ஆற்றலை விட அதிகமான ஆற்றலை DMN பயன்படுத்துகிறது.

தூக்கம் எவ்வாறு உதவுகிறது?

*தூக்கம் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியம். இந்த சமயத்தில் மூளை அனைத்து விதமான தகவல்களையும் செயல்படுத்துதல், ஞாபகங்களை ஒன்று சேர்த்தல் மற்றும் நச்சுக்களை அகற்றுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

*தூக்கமானது மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தி, அறிவுத்திறன் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

*ஓய்வு பெறும் பொழுது உங்களுடைய ஞாபகங்கள் அனைத்தும் முறையாக சேர்க்கப்பட்டு, கற்றல் திறன் அதிகரிக்கும்.

*ஓய்வின் போது உங்களுக்கு அமைதி கிடைத்து, உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண்பீர்கள்.

*போதுமான அளவு ஓய்வு பெறுவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் மிகவும் அவசியம்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments