
காஸாவில் நிவாரணப் பொருள் விநியோக நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் மாண்டனர்.
தென் பகுதியில் உள்ள நாஸர் (Nassar) மருத்துவமனை அந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
நிவாரணப் பொருள்களைப் பெறச் சென்றபோது இஸ்ரேலியத் துருப்பினர் சுடத் தொடங்கியதாக அங்கிருந்தோர் கூறினர்.
சுமார் ஐந்து நிமிடம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உதவி பெறச் சென்ற சிலர் தெரிவித்தனர்.
அதன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சு மறுத்தது.
துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
மிரட்டலாய் இருந்தவர்களை எச்சரிக்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாய் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments