
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஆறாம் தேதி ஹைதராபாத் நகரில் 19வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை அதனுடைய சொந்த மண்ணில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் மீண்டும் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 152-8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நிதீஸ் ரெட்டி 31 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் களமிறங்கிய குஜராத்துக்கு சாய் சுதர்சன் 5, ஜோஸ் பட்லர் 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 49 (29) ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் கில் 61* (43) ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ரூதர்போர்ட் 35* (16) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 16.4 ஓவரிலேயே 153-3 ரன்களை எடுத்த குஜராத் தங்களுடைய 3வது வெற்றியைப் பதிவு செய்தது. மறுபுறம் ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு தமது சொந்த ஊரான ஹைதராபாத்தில் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஆர்சிபி அணி தம்மை கழற்றி விட்டதை ஜீரணிக்க முடியவில்லை என்று சிராஜ் கூறியுள்ளார். மேலும் இந்திய அணி தம்மை கழற்றி விட்டாலும் அதற்காக கவலைப்படாமல் தமது தவறுகளை திருத்திக் கொண்டு கம்பேக் கொடுத்துள்ளதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களது சொந்த ஊரில் இருக்கும் மைதானத்திற்கு வரும் போது வித்தியாசமான உணர்வு இருக்கும்”
“எனது குடும்பம் என் ஆட்டத்தை பார்த்தது தன்னம்பிக்கையை கொடுத்தது. பெங்களூரு அணிக்காக 7 வருடங்கள் விளையாடினேன். அங்கே மேடு பள்ளங்கள் இருந்தது. எனது பவுலிங், ஃபீல்டிங், மனநிலை ஆகியவற்றில் வேலை செய்தது தற்போது உதவுகிறது. ஆரம்பத்தில் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பின்னர் நிறைய விஷயங்களை திட்டமிட்டுள்ளேன் என்பதை எனக்கு நானே விளக்கிக் கொண்டேன்”
“சாம்பியன்ஸ் ட்ராபியிலும் இடம் பெறவில்லை. அப்போது எனது மனநிலை மட்டும் ஃபிட்னஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். தற்போது மகிழ்ச்சியுடன் பௌலிங் செய்கிறேன். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாதது உங்களது மனதிற்குள் வரும். ஆனால் அங்கே விளையாடப் போதுமானவராக இல்லாததால் ஐபிஎல் தொடருக்கு தயாராக விரும்பினேன். நீங்கள் விரும்புவதை செயல்படுத்தும் போது மேலே இருப்பீர்கள். நீங்கள் சொல்வதைப் பந்து கேட்கும் போது வித்தியாசமான உணர்வு வரும். அதை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments