Ticker

6/recent/ticker-posts

IPl 2025 : கடைசி ஓவர் நீடித்த மேட்ச்.. டெல்லியை 7 விக். வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி


ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரெல், கருண் நாயர் களம் இறங்கினர். போரெல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் கருண் 31 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 28ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 39 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி ஓவர்களில் அசுதோஷ் சர்மா அதிரடியாக 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 203 ரன்கள் எடுத்து. இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.

கேப்டன் சுப்மன் கில் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். சாய் சுதர்சன் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 7.3 ஓவர்களில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் இணைந்த ஜாஸ் பட்லர் – ரூதர்ஃபோர்டு இணை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக முன்னணி பவுலர் ஸ்டார்க்  வீசிய 15 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை அடித்து பட்லர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

34 பந்துகளை எதிர்கொண்ட ரூதர்போர்டு 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கும், 2 ஆவது பந்தை பவுண்டரிக்கும் அனுப்பி அணியை வெற்றி பெற வைத்தார் ராகுல் திவாதியா.

ஜாஸ் பட்லர் 54 பந்துகளில் 4 சிக்சர் 11 பவுண்டரியுடன் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.  ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments