Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவில் 2 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு.. ஆனால்? - WHO பகிர்ந்த முக்கிய தகவல்!


இந்தியாவில் 2 புதிய வகை கொரோனாக்கள் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமான புதிய வகை தொற்று பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 257 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இந்த வகை கொரோனா காரணமாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் அதிக வீரியம் இல்லாதவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது ஆறுதலாக அமைந்துள்ளது.

தற்போது பரவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்புகளே இருப்பதாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், பல துறைகளுடன் இணைந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments