
நீங்கள் வாங்கும் இறாலை சுத்தம் செய்து தசையை தனியாக பிரித்த பின் ஓடுகளை தூக்கி வீசி விடுவீர்களா? இனிமேல் அதை
செய்யாதீர்கள் தசையை நீக்கிய ஓடுகளை 30 நிமிடம் வினிகர்
அல்லது எலுமிச்சம் சார் விட்டு ஊற விடுங்கள் பின்னர் எடுத்து
உப்பு மஞ்சள் போட்டு குலுக்கிக் குலுக்கி அனைத்திலும் படும் படி செய்து விட்டு குறைந்தது 6 தடவையாவது கழுவுங்கள்
கழுவிய பின் நீர் வடியும் தட்டில் போட்டு நீரை வடிய விட்டு மிளகு சிறு சீரகம் கறிவேப்பிலை போட்டு வறுத்து பவுடர் செய்து அதன் மேலே தூவி அனைத்து ஓட்டிலும் படும் வாறு செய்து விட்டு நன்றாக வெயிலில் காய விடுங்கள்
இதனை அனைத்து விதமான காய்கறிகளுக்கும் போடலாம்( 1) தேக்கரண்டி வீதம் காய் கறி சமைத்து இறுதியில் சேர்க்கலாம் வாசமான சுவையான பொடி
கத்தரிக்காய் மரவள்ளி ஆசினிப்பலாக்காய் பயிற்றங்காய் இவைகளுக்கு அதிகச் சுவை தரும்
0 Comments