Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெப்பநிலை 51.6 டிகிரி செல்சியஸ்!


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக 2009 மே மாத வெப்பநிலை சாதனையை முறியடித்து சனிக்கிழமை 51.6 டிகிரி செல்சியஸை எட்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இன்று நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை அல் ஐன் பகுதியில் 51.6C என்பதாக,  ஐக்கிய அரபு எமிரேட் உள்ளூர் நேரப்படி 13:45 மணிக்கு  பதிவாகியுள்ளது,” என்று வானிலை ஆய்வு மையம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது, இது அபுதாபி பகுதியில் கடந்த  வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலையை விட 1.2C அதிகமாகும்.
இந்த இரண்டு வெப்பநிலைகளும் 2009 மே மாதத்தில் பதிவான 50.2 செல்சியஸ் என்ற முந்தைய சாதனையை விட அதிகமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலோரப் பகுதிகளில் மிதமான வானம் மற்றும் அதிகரித்து வரும் ஈரப்பதம், வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் அளிப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், உச்ச சூரிய நேரங்களை  தவிர்க்கவும், சுவாசிக்கக்கூடிய துணிகளை அணியவும், குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை வாகனங்களில் ஒருபோதும் விட்டுச் செல்லவும் கூடாதெனவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்துகின்றனர். 

செம்மைத்துளியான்


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments