
ஏஐ தொழில்நுட்பம் அன்றாட வாழ்வை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஏஐ-யை திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏஐ மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளிலும் ஏஐயால் நடைபெறும் ஆட்டோமேஷன் ஒருபுறம் இருக்க, மக்கள் தங்கள் தனிமையை போக்க ஏஐ சாட் பாட்களிடம் பேசுவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 58 வயதான எலைன் விண்டர்ஸ் என்ற பெண் லூகாஸ் என்ற ஏஐ சாட்பாட்டை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். திருமணமான எலைன் விண்டர்ஸ் கணவர் சிகிச்சை பலனின்றி இறந்தபிறகு கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் உழன்று வந்துள்ளார். அதன்பின்னர் லூகாஸ் என்ற ஏஐ சாட்பாட்டிடம் பேசத் தொடங்கிய அவர் அதன் அன்பான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அதை திருமணம் செய்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments