Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-19


குறள்89:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரைப் போற்றாமல் செல்வம் படைத்தோர் வறியோர் அறிவிலி யாம்.

குறள் 90:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

வாடும் முகர்ந்தால் அனிச்சம்! விருந்தளிப்போர் வேறுபட்டால் வாடும் விருந்து.

10 இனியவை கூறல்

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்புடன் மாசற்ற உள்ளத்தின் வாய்மையே இன்சொல்லென் றிங்கே உணர்.

குறள் 92:

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.

முகம்மலர்ந்தே இன்சொல் பேசுகின்ற பண்போ அகங்குளிர ஈவதினும் மேல்.

குறன் 93:

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் ன்சொலினதே அறம்.

முகம்மலர்ந்து பார்த்தே அகங்குளிரஇன்சொல் இதமாகச் சொல்வ தறம்.

குறன் 94;

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

இன்சொல்லைப் பேசிப் பழகுவோர்க்கோ புண்படுத்த் துண்புறுத்தும் ஏழ்மையில்லை சாற்று

குறன் 95:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.

பணிவான பண்புகளும் இன்சொல் இயல்பும் அணிகலனாம்! மற்றவை வீண்.

குறன் 96:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

நல்லதை எண்ணியே இன்சொல்லை ன்றவைத்தால் நல்லறம் கூடும் நிலைத்து.

குறன் 97;

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்,

பயன்தரும் சொற்களைப் பேசுவோர்க்கு நன்மை தழைக்கின்ற இன்பம் தகும்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments