Ticker

6/recent/ticker-posts

Ad Code



காதல் கடிதம் எழுதவா?


வணக்கம்  கூறியே
ஆரம்பிக்கின்றேன் 
வரிகளிலே வலியோடு
காதலும் மோகமும் .

கலந்திருக்கும்
மறைமுகமாக
புரிந்து பதிலிடு.
கண்ணாயுதம்
பெயரானாலும்
உன்னை வீழ்த்தினேன்
என் (கண்)  ஆயுதம் 
கொண்டு  தானே
வாள் வீச்சுக்கு
அஞ்சாத மன்னனே 
என் விழி வீச்சுக்குள்
அடங்கியதேனோ
ஊரெங்கும் காற்றில்
பறக்கின்றதாம் நமதுகதை
கண்ணீரோடு கண்
மையும் கரைகிறது
காலநேரமும் வீணாகக்
விரைகின்றதே மச்சானே.

ஆர் எஸ் கலா

Email;vettai007@yahoo.com

 

Post a Comment

1 Comments